Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 03 AUG 1969
இறப்பு 20 JUN 2025
அமரர் விக்கினேஷ்வரன் சபேசன்
வயது 55
அமரர் விக்கினேஷ்வரன் சபேசன் 1969 - 2025 கோண்டாவில், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கோண்டாவிலைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வதிவிடமாகவும் கொண்ட விக்கினேஷ்வரன் சபேசன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

கை பிடித்த நாள் முதலாய் கண்னை
இமை காப்பது போல் எம்மைக் காத்து வந்தீரே!
 எத்தனை தான் எமக்கு இருந்தாலும்
எம் உயிர் நீங்கள் இல்லையே என்று
ஏங்கித் தவிர்க்கிறோம்.

உங்கள் சிரித்த முகமும் சிந்தனையான பேச்சும்
எம் நெஞ்சை விட்டு நீங்கவில்லை?
 எத்தனை உறவுகள் எமக்கு அருகிலிருந்தாலும்
உம் வெற்றிடத்தை யாராலும் ஈடு செய்யமுடியாது?

தனி மரமாக எங்களை விட்டு ஏன்
அவசரமாக சென்றுவிட்டீர்கள்
இவ்வளவு தான் நம் வாழ்க்கை என்று
காலம் நினைத்துவிட்டதா?

பாசத்தின் உறைவிடம் நீங்கள் அப்பா!
 நல்ல நேசத்தின் இருப்பிடம் நீங்கள் அப்பா!
 அப்பா என்ற சொல்லின் சூட்சுமம் நீங்கள்!
 குடும்பத் தலைவராய் எங்களை வழிகாட்டினீர்கள்
 நாங்கள் எங்கே எப்படி வாழ்ந்தாலும்
 நீங்களே எங்கள் வாழ்வின் ஒளி விளக்கு!   

ஆறுதல் கூற ஆயிரம் வார்த்தைகள் இருந்தாலும்
 அப்பா பரிவுடன் நீங்கள் காட்டிய அன்பினை
 இனி எவர்தான் எங்களுக்கு கொடுப்பார் அப்பா!

நாட்கள் தான் 31 ஆனதுவே
உங்கள் நினைவுகள் நெஞ்சை விட்டு நீங்கவில்லை! 
உங்கள் ஆத்மா சாந்தி அடைய
 இறைவனைப் பிரார்த்திக்கிறோம்...

ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!  

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 30 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sun, 22 Jun, 2025