யாழ். வல்வெட்டித்துறை இலந்தைக்காடைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Birmingham ஐ வதிவிடமாகவும் கொண்ட வெற்றிவேல் சசிகுமார் அவர்கள் 15-01-2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வெற்றிவேல், பூமணி தம்பதிகளின் அன்பு மகனும்,
சதீஸ்வரன், இந்துமதி, சசிகரன், சுதாகரன், சுதார்சன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
மைதிலி, வசந்தரூபன், நந்தினி, சாளினி, சஞ்சி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
லக்ஷயா, அக்ஷயா ஆகியோரின் அன்புச் சித்தாப்பாவும்,
அனுஸ்கா, ஆயிஷா ஆகியோரின் அன்பு மாமாவும்,
ஜிரூஷன், யதுசன், அக்சயன், சாட்சி ஆகியோரின் அன்புப் பெரியாப்பாவும்,
கனகரத்தினம், பரிமளம் ஆகியோரின் அன்பு மருமகனும்,
சின்னப்பு, திரவியம் ஆகியோரின் அன்பு பெறாமகனும்,
சுரேஸ், சுரேஷினி ஆகியோரின் அன்பு மச்சானும்,
அருள்சீலன், அருள்தாசன், திரவியாதாசன் ஆகியோரின் உடன் பிறவாச் சகோதரரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.