1ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
13
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
திதி திகதி: 25-11-2021
யாழ். கந்தரோடையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேல்நாதன் ராஜினி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறமுடியவில்லை எம்மால்
இப்புவியில் ‘அம்மா’ உம்மை நாம்
இழந்த துயரை ஈடு செய்ய
முடியாமல் தவிக்கிறோம்
தாய்க்கு வரைவிலக்கணமே நீதானம்மா!
எங்களை அன்பு மழை பொழிந்து
பாசமாய் வளர்த்தெடுத்தாயே!
நீங்கள் மண்ணுலகை பிரிந்து
பன்னிரு மாதங்கள் சென்றதம்மா!
என்ன நடந்தது ஏது நடந்தது என்று கணக்கிட்ட
நாட்கள் அதற்குள் ஆண்டு ஒன்று ஆகி விட்டதே!
நீங்கள் மறைந்து ஓராண்டு ஓடி மறைந்தாலும்
உங்கள் ஒளிமுகத்தை முன் நிறுத்தி என்றும்
உங்கள் மீளா நினைவுகளுடன் வாழ்கின்றோம் அம்மா!
தகவல்:
குடும்பத்தினர்