யாழ். சாவகச்சேரி கல்வயலைப் பிறப்பிடமாகவும், உசனை வசிப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட வேதவனம் மார்க்கண்டு அவர்கள் 16-07-2019 செவ்வாய்க்கிழமை அன்று பிரான்ஸ் Gien ல் காலமானார்.
அன்னார், காலஞ்சென்ற வேதவனம், தங்கம்மா தம்பதிகளின் அன்பு மகனும், கார்த்திகேசு நாகமுத்து தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற முத்துப்பிள்ளை(முத்து ரீச்சர்) அவர்களின் அன்புக் கணவரும்,
வாசுகி அவர்களின் அன்புத் தந்தையும்,
சின்னையா நவரத்தினம்(சிவா) அவர்களின் பாசமிகு மாமனாரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, பொன்னையா, இரத்தினம், ஆறுமுகம், மாணிக்கம் மற்றும் குமாரசாமி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்றவர்களான முருகேசு, விநாசித்தம்பி மற்றும் சிவயோகநாதன், இராமநாதன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.