முல்லைத்தீவு வட்டுவாகலைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வெற்றிவேலு சண்முகம் அவர்களின் 10ம் ஆண்டு நினைவஞ்சலி.
பாசமிகு தந்தையே
பார் புகழ் போற்ற பக்குவமாய்
எமை வளர்த்த பண்பாளனே
நேசத்தின் இருப்பிடமே
எம் நெஞ்சமெல்லாம் நிறைந்திருப்பவரே
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த அப்பாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த அப்பாவே
வளமாக எமைக் காத்த தந்தையே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்
உங்கள் நினைவுகள் எப்போதும்
அன்பால் என்றும் எத்தனை ஆண்டுகள்
ஆனாலும் நீங்காது உங்கள் நினைவு
எம் நெஞ்சைவிட்டு...
எங்கள் உள்ளங்களில் அணையா நெருப்பாய்
உங்கள் புன்னகை துளிர்விட்டுத் தளிர்களாய்
எங்கள் இதயங்களில் நனைத்துக்கொண்டே இருக்கும்
உங்கள் அன்பான பாசமிகு புத்திரன்
சண்முகம் பிரபாரூபன் (Pricipal Engineer)
எமைவிட்டுப் பிரிந்திருக்கும் வேளையில்
மேலும் கதிகலங்கி நிற்கின்றோம்,
உங்கள் ஆசிர்வாதம் என்றும் எங்களை
வழிநடத்தும் என்று நம்பிக்கையில்
வாழ்ந்துகொண்டு இருக்கின்றோம்.
கல்விச் சேவையை கண்ணாகக் கருதி
கடமை செய்த ஆசானே !!!
உள்ளம் நிறை அன்பால்
வாழ்வில் உயர்ந்து
எண்ணம் எல்லாம்
மாணவர் உயர்வை நோக்கி
நித்தம் சிந்தித்த
உங்கள் பிரிவால்
விழிநீர் சொரிகிறோம்
ஆண்டுகள் பத்து ஓடி மறைந்தாலும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
குடும்பத்தினர்....!!!!
I will never forget the day, 10 years ago, when we got the dreaded call from Sri Lanka that you had passed away Ammapppa. I will never forget the way my mother, aunt and uncle shrieked and sobbed...