Clicky

16ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 13 MAR 1932
இறப்பு 19 NOV 2009
அமரர் வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை
வயது 77
அமரர் வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை 1932 - 2009 தாவடி தெற்கு கொக்குவில், Sri Lanka Sri Lanka
Tribute 0 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தாவடி தெற்கு கொக்குவிலைப் பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஆனைக்கோட்டை ஆறுகால்மடத்தில் வசித்துவந்தவருமான வேலுப்பிள்ளை சிதம்பரப்பிள்ளை அவர்களின் 16ம் ஆண்டு நினைவஞ்சலி.

அன்புத் தெய்வமே
 எங்கள் ஆருயிர் அப்பாவே
 அன்போடும் பண்போடும்
அயாரமல் காத்தவரே

16 ஆண்டு ஆனதுவோ அப்பா
 நீங்கள் இன்றி ஆறாத் துயரில்
நாம் அனுதினமும் தவிக்கின்றோம்.

ஆயிரம் உறவுகள் அருகில் இருந்தாலும்
 அப்பா உங்கள் அன்புக்கு அது ஈடாகுமா
எல்லாம் இந்தென்ன எம்மோடு
நீயின்றி இதயம் கனக்கிறது

எழுதிய விதி எண்ணி நேற்றுபோல்
எல்லாமே நெஞ்சுக்குள் நிக்குதய்யா
நித்தம் உனைநினைத்து சித்தமும் துடிக்குதய்யா

அப்பப்பா என்றழைக்க இன்று நீங்கள் இல்லை
பேரப்பிள்ளைகளில் உங்கள் பாசம்
எங்களுக்குத்தான் தெரியும்
 உங்களின் புன்னகை தவழும் முகம்
என்றென்றும் நிலைத்திருக்கும்
 எங்கள் உள்ளத்தில் உயிருள்ளவரை
உங்களை மறவோம் என்றென்றும்
எங்களுடன் வாழும் ஓர் உன்னத ஆன்மா நீங்கள் 
அப்பப்பா

காலங்கள் விடைபெறலாம் ஆனாலும்
கண்முன்னே நீ வாழ்ந்த நினைவுகள்
ஒருபோதும் அகாலது வலிகள் சுமந்து
விழிகள் நனைந்து வாழும் நாள் முழுக்க
 உங்களை நினைந்து வாழும் உங்கள் குடும்பத்தினர்

தகவல்: பேத்தி சுமதி ரூபன், மகன்(மோகன்), மருமகள்(வசந்தா), மகன்கள், மகள் மற்றும் பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள்,குடும்பத்தினர்.

கண்ணீர் அஞ்சலிகள்

No Tributes Found Be the first to post a tribute