முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குமுழமுனையை வசிப்பிடமாகவும், தற்போது புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நீங்காத நினைவுகள் தந்து
நீண்ட தூரம் சென்று
நாட்கள் பல கடந்தாலும்
ஓயவில்லை உங்களின் நினைவுகள்
அகலவில்லை உங்களின் அன்பு முகம்...
ஆற்றிட முடியாமல் ஏங்குது எம் மனம்
அழுத விழிகளுக்கு ஆறுதல் காட்டிட
ஒருமுறை மீண்டும் வாங்கோ
உங்கள் புன்னகை முகம் காண.....
மண்ணிலே வீழ்ந்த மழை மீண்டும்
விண்ணுக்கே செல்லுமென்பார்
விண்ணுக்குச் சென்ற நீங்கள் மீண்டும்
மண்ணுக்கு வரமாட்டீரோ?
எம்கண்ணிலே வழியும் நீரை உங்கள்
கைகளால் துடைத்திட வாங்கோ!
உங்களை நினைத்து உருகும் எம்மை..
அன்பால் அணைத்திட வாங்கோ.!!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அமரர் வேலுப்பிள்ளை அன்னலட்சுமி அவர்களின் 31ம் நாள் அந்தியேட்டி 24-11-2023 வெள்ளிக்கிழமை அன்று நடைபெற்று அதனைத்தொடர்ந்து 26-11-2023 ஞாயிற்றுக்கிழமை அன்று 2ம் வட்டாரம் புதுக்குடியிருப்பில் அமைந்துள்ள தாய் மனையானயில் மதியபோசனம் நடைபெறும். இந்நிகழ்வில் தங்கள் குடும்ப சகிதம் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.