முல்லைத்தீவு புதுக்குடியிருப்பைப் பிறப்பிடமாகவும், குமுழமுனையை வசிப்பிடமாகவும், தற்போது புதுக்குடியிருப்பை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை அன்னலட்சுமி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
உயிர் தந்த எம் அன்னையே!
ஓராண்டு போனதம்மா
உன் முகம் பாராமல்
குன்றின் மணி விளக்கே- எங்கள்
குல தெய்வமே!
வல்லமையாய் வாழ்ந்து
வழி நடத்திய எம் அன்னையே
நிழற்குடையாய் எம்மை நித்தமும் காத்தாய்
விழி மூட மறுக்குதம்மா- உன்
இமை மூடிப் போனதனால்
மும்மலரில் மூத்த மலராய்
பேரன்பு கொண்ட எம் பேத்தியுமாய்
வற்றாத புன்னகையோடு
வலம் வந்த எம் தெய்வமே!
பிறந்தநாள் விழாவெடுக்க நாம்
கட்டிய கற்பனை கோட்டை
அஸ்திவாரத்தோடு அஸ்தமித்து போனதுவோ?
பூட்ட பிள்ளைகளை கண்ணார காணவிடாமலே
காலன் கண்களை மூடினாணோ!
ஆறாத வலி சுமந்து ஆத்மா
சாந்தி அடைய பிரார்த்திக்கின்றோம்!
உங்கள் பிரிவால் துயருறும்
அன்பு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி 15-10-2024 செவ்வாய்க்கிழமை அன்று மதியம் முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 2ம் வட்டாரத்தில் உள்ள அவரது பூர்வீக இல்லத்தில் நடைபெறும். தனிப்பட்ட அழைப்பாக ஏற்று உற்றார், உறவினர், நண்பர்கள், அனைவரும் கலந்துக்கொள்ளும் வண்ணம் கேட்டுக்கொள்கின்றோம்.