Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 23 JUN 1939
இறப்பு 27 MAR 2026
திரு வேலுப்பிள்ளை ஆயித்தர்
இளைப்பாறிய மின் அத்தியட்சகர்(ES)
வயது 86
திரு வேலுப்பிள்ளை ஆயித்தர் 1939 - 2026 கரவெட்டி, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கரவெட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Torontoவை வதிவிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஆயித்தர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

மாதம் ஒன்று ஆனாலும்
ஆற முடியவில்லை எம்மால்
இப்பூமியில் உங்களைநாம் இழந்த துயரை
ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்...

அன்பான அப்பா உங்கள் முகம் காண
ஏங்கித் துடிக்கின்றோம் எங்களை வழிநடத்தி
அறிவூட்டவேண்டிய நீங்கள் பாதியில் விட்டுச் சென்றதேன்!

நீங்கள் மறைந்து போன பின்பும்
 உங்கள் நினைவுகளை சுமந்த உறவுகளின்
 நெஞ்சமெல்லாம் கண்ணீரால் நனைந்து
போகின்றதய்யா!

இன்றுடன் 31 நாட்கள் ஓடி
 மறைந்தாலும் உங்கள் நினைவுகள்
என்றென்றும் எம்மை விட்டகலாது.

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

Summary

Notices

மரண அறிவித்தல் Sat, 28 Mar, 2026