விழி நீர் வழி சொரிதல். ----------------------------------------- கரவெட்டி ஊரினிலே சிதம்பரப்பிள்ளை வள்ளிப்பிள்ளை மகளாகப் பிறந்து கற்று விளைந்தேறி வந்து ஆசிரியர் பணி புரிந்து கண்டம் விட்டு கண்டம் கடந்து வாழ்ந்து வந்து கருணையே உள்ளம் கொண்ட உந்தனைக் காலம் வந்தது என்று காலனே அழைத்து விட்டான், பவள முல்லை பூத்தாற் போல் இராசம்மாவாய் நீ பிறந்தாய் பன்னெடுங்காலமாகப் பாரினிலே வேலுப்பிள்ளை துணைவியாக வாழ்ந்து வந்தாய் பந்தபாச உறவோடு சொந்தமாக நீ இருந்து ஒன்பது பிள்ளைகளின் தாயானாய் பக்கமது் அக்கம் எல்லாம் பக்குவமாய் நீ நடந்தாய், வாழ்க்கை இங்கு ஒரு முறைதான் வரையறையாய் முடித்து விட்டாய் வந்து உறவாடிவிட்டு இதயங்கள் விழி நீர் சொரிய விட்டுப் போகின்றாய் வாழ்ந்த காலம் மறவாது வணங்குகின்றோம் உந்தன் ஆத்மா சாந்தி அடையட்டும். ஓம் சாந்தி, சாந்தி, சாந்தி, அஞ்சலி தெரிவிப்போர். -----------------------------------------