2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை இராசம்மா
இளைப்பாறிய ஆசிரியை- கண்டி/மடுல்கலை மகா வித்தியாலயம், முல்லைத்தீவு இந்து மகா வித்தியாலயம்
வயது 92
Tribute
14
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
யாழ். கரவெட்டி துன்னாலையைப் பிறப்பிடமாகவும், லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை இராசம்மா அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்பால் எமைத் தாங்கிய
அருமை அம்மாவே
இன்னும் ஆறவில்லை
நெஞ்சில் பட்ட வலி
தேரேற்றி வடம் பிடிக்க
எங்கள் தெய்வமே நாம் நினைக்க
காலன் இட்ட கட்டளையில்
காற்றில் கலந்து போனீர்களே!
ஆண்டு இரண்டு நொந்து நொந்துதான் கரைய
எங்கள் கண்ணோர விழி நீரும்
இன்னும் காயாமல் போகின்றதே
ஆண்டுகள் இரண்டு சென்றாலும்
ஆறவில்லை மனது
ஆண்டுகள் பல சென்றாலும்
ஆறாது ஆறாது நினைவுகள்!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
குடும்பத்தினர்