31ம் நாள் நினைவஞ்சலி: 14-01-2022
யாழ். கரம்பொன் கிழக்கு ஊர்காவற்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை ஜெகநாதன் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
நாட்கள் 31 சென்றாலும் அகலவில்லை
எங்கள் துயரம்- எம்
விழிகள் முட்டி நிற்குது கண்ணீரால்
நீர் உம் விழி மூடிய நாள் முதல்...!
உருக்குலைந்து விட்டோம் உயிரோடு
உம் நினைவுகள் இன்றும் எம் மனதோடு
வாழ்க்கையின் அர்த்தங்கள்
புரிந்து கொண்டோம்
உம்மால்-இன்று
வாழ்வதன் அர்த்தம் கூட புரியவில்லை
இருந்தும் வாழ்கின்றோம்
வானில் விடிவெள்ளியாய்
நீ தோன்றுவதாய் எண்ணி...!!
உங்களுடைய ஆத்மா சாந்தியடைய
இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.