8ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம்
வயது 92

அமரர் வேலுப்பிள்ளை யோகலிங்கம்
1922 -
2015
புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
0
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி உதயநகர், வவுனியா மில்றோட் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை யோகலிங்கம் அவர்களின் 8ம் ஆண்டு நினைவஞ்சலி.
எம் அருமை தந்தையே
எம்மைவிட்டு எங்கு சென்றீரோ...
வையத்துள் வாழ்வாங்கு வாழ்ந்து
வானடைந்து 8 ஆண்டு ஆனாலும்
ஆறாது உங்கள் பிரிவுத்துயர் அப்பா...
ஆண்டவன் படைப்பினை
ஆழமாய் பார்த்தாலும்!
பாசமாய் உங்களின்
பண்பினை நினைகின்றோம்!
நேசமாய் உங்களின்
புன்னகையை ரசிக்கின்றோம்!
எம்மை எல்லாம் அன்பாலும் பண்பாலும்
அரவணைத்து எம்மை வழிநடத்திய
அந்த நாட்கள் எம் நினைவலைகளில்
என்றும் சுழல்கிறதே அப்பா...
காவல் தெய்வமாய் எங்களோடு
என்றும் நீங்கள் இருப்பதாய் எண்ணி
உங்கள் நினைவுகளோடு
வாழ்ந்து கொண்டிருக்கும்....
அன்புத் தந்தையே!
உங்கள் ஆத்மா சாந்தியடய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
தகவல்:
தவயோகராஜா(சுவிஸ்) குடும்பத்தினர்.
கண்ணீர் அஞ்சலிகள்
No Tributes Found
Be the first to post a tribute