யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Korschenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
எமது குடும்பத் தலைவன் அமரர் வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி நிகழ்வு 03-02-2025 திங்கட்கிழமை அன்று ந.ப 12:00 மணிமுதல் பி.ப 03:00 மணிவரை, Engelblecker Str. 326, 41066 Mönchengladbach, Germany எனும் முகவரியில் நடைபெறவுள்ளதால், அத்தருணம் நீங்கள் அனைவரும் வருகை தந்து, அன்னாரின் ஆத்மாசாந்தி பிராத்தனையிலும் அதனை தொடர்ந்து நடைபெறும் மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.