யாழ். காரைநகர் பழைய கண்டியைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Korschenbroich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை செல்வரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 24-12-2025
அன்பான அப்பாவே!
உங்கள் அன்புச் சிறைக்குள் அடைபட்டு
இன்புற்று இருந்த இனிய வசந்த காலம்
எங்கள் இதயத்துள் இன்பவலியாய்
எமக்குள்ளே ஆன்மாவை அச்சுறுத்த
ஏன்? எங்கே? பிரிந்து போனீர்கள்!
நீ இல்லாத நாமும்
நிலா இல்லாத வானம்!
நம் வீட்டு சூரியன் அழுகிறது
துடைக்க நினைக்கும் விரல்கள் எரிகிறது
தன்னை உருக்கி பிறருக்கு ஒளி கொடுக்கும்
மெழுகுவர்த்தி போல்
உம்மை உருக்கி எம்மை காத்து
வந்த தெய்வமே...
பிள்ளைகளும் மனைவியும்
உமை நினைத்து வாடிடவே
போனது எங்கேயோ ?
உறவுகளைப் பிரிந்து!
அப்பா என்று அழைக்க நீங்கள் இல்லையே
அடி மனதில் வலி துடிக்க உயிரோடு வாழ்கிறோம்
எங்கள் உயிர் உள்ளவரை எங்கள் நினைவுகளில்
கலந்தே இருக்கும் உங்கள் நினைவுகள் அப்பா!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!