Clicky

5ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 30 JAN 1943
மறைவு 24 NOV 2017
அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் (அம்பலத்தாச்சி)
வயது 74
அமரர் வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் 1943 - 2017 வட்டுக்கோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 1 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.

கண்ணோடு காதல் ஈட்டி
காலமெல்லாம் அன்பை ஊற்றி
ஓருயிராய் ஒருமித்து இல்லறம் தனை
நல்லறமாக்கிய என் உற்றவரே
என்னைத் தவிக்கவிட்டு ஆண்டுகள் ஐந்து கடக்கிறது ஐயனே!

அன்பைப் பொழிந்து அறிவைத் தந்து
எம்மை இவ்வுலகில் பெருமையோடு
வாழ வைத்த எம் அன்புத் தந்தையே!
உயிரூட்டி வளர்த்தவரை
உயிர் உள்ளவரை மறவோம்!அணைக்கின்ற கைகளும்
அழகிய புன்னகையையும்
அன்பை சுமந்த இதயத்தையும்
ஆண்டவன் பறித்தது ஏன்….?
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்
ஆண்டுகள் ஐந்து ஆனால் என்ன?
எம்மை விட்டு நினைவுகள் என்றுமே
மறந்து விடப்போவதில்லை!

உங்கள் நினைவுகள் சுமந்து வாழும்
மனைவி , பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.

தகவல்: குடும்பத்தினர்