யாழ். வட்டுக்கோட்டை சிவன் கோயிலடியைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை நச்சினார்க்கினியசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
கணப்பொழுதும் எண்ணவில்லை - எம்
கலங்கரை விளக்கே .....நீ
இமைப்பொழுதில் எம்மை விட்டகல்வாயென.
அன்புடனும் பண்புடனும் பாசத்துடனும் வழி நடத்திய – எங்கள்
அன்புத் தெய்வமே அப்பா….
நீங்கள் இல்லாத உலகம் என்றும் இருள் மயமானது,
எங்கே காண்போம் உங்கள் மலர்ந்த முகத்தை?
உங்கள் பிரிவைத் தாங்குமா எங்கள் இதயம்?
உங்களை நினைக்கும் போது வரும் கண்ணீரை
நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது
காலங்கள் கடந்து சென்றாலும்
ஒவ்வொரு நொடிகளிலும்
இதயத்தின் துடிப்பைப் போல்
எங்கள் அருகில் நீங்கள் இருப்பதை
நாங்கள் உணருகின்றோம் அப்பா!
எங்கள் தெய்வத்தின் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
நண்பன் அம்பலம் மறைந்து ஒரு வருடம் கழிந்தது தெரியவில்லை.ஏனெனில் அவர் எல்லோர் மனதிலும் வாழ்ந்து கொண்டிருக்கிறார்.அவருடன். நான் கழித்த நாட்கள் வாழ்நாளில் மறக்க முடியாதவை.அவரின் புன்னகை...