Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 29 SEP 1938
இறப்பு 04 MAR 2019
அமரர் வேலுப்பிள்ளை குலசிங்கம்
முன்னாள் ஊழியர், இலங்கை போக்குவரத்துச்சபை
வயது 80
அமரர் வேலுப்பிள்ளை குலசிங்கம் 1938 - 2019 தெல்லிப்பழை வீமன்காமம், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். தெல்லிப்பழை வீமன்காமத்தைப் பிறப்பிடமாகவும், ஏழாலை கிழக்கை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை குலசிங்கம் அவர்கள் 04-03-2019 திங்கட்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வேலுப்பிள்ளை சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான துரையப்பா தங்கப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சந்திரவதனா அவர்களின் பாசமிகு கணவரும்,

ஸ்ரீதரன்(சுவிஸ்), ஸ்ரீரஞ்சனா(சுவீடன்), தயாபரன்(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினசிங்கம், காராளசிங்கம் மற்றும் தங்கமணி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பகீரதி(ரதி- சுவிஸ்), பரமநாதன்(சுவீடன்), கமலேஸ்வரி(ஐக்கிய அமெரிக்கா) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான ஞானசேகரம், சிவயோகம், திலகவதி, கந்தையா மற்றும் கணேசலிங்கம், மகேஸ்வரி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மாதங்கி, மாதனன், பிரியந்தா, றம்யந்தா, மிதுஷ், ஜனந்தனா, உபாசினி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 06-03-2019 புதன்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஏழாலை கிழக்கு காடகடம்பை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்