யாழ். ஊர்காவற்துறை நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மருதானையை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை கனகராஜா அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆயிரம் பிறை கண்ட எங்கள் ஐயாவே!
பண்பின் இருப்பிடமே பாசத்தின் உறைவிடமே
பிள்ளைகள் கலங்கி கவலையை சுமந்து நிற்க
பாரிலுள்ளோர் பரிதவிக்க பக்கமுற்றோர் கூடிநிற்க
பாசமுள்ள உறவுகளும் கண்ணீர் மல்கி நிற்க
ஐயா! நீங்கள் விண்ணலுகம் சென்று
ஓராண்டு காலம் ஆகிவிட்டது ஐயா!
ஆயிரம் பிறை கண்ட அற்புதம் வாய்ந்த ஐயாவே
அனைவரையும் அன்பாலே அரவணைத்து நின்றீர்களே
அல்லும் பகலும் உறவாடி மகிழ்ந்தீர்கள்
உங்கள் நினைவுடன் தான் இங்கே நாங்கள் இருக்கின்றோம்!
எங்கு சென்றீர்கள் ஐயாவே! நீங்கள்
இப்புவியில் வாழ்ந்து போதுமென்று
நாரந்தனை கந்தசுவாமியின் காலடி சென்றீர்களே
நாம் இங்கே கண்ணீர் சொரிந்து துயர் பகிர்ந்துவண்ணம் உள்ளோம்!
ஓராண்டு என்றால் என்ன ஓராயிரம் ஆண்டு என்றாலும்
உங்கள் நினைவுடன் நாம் இருப்போம்!
உங்கள் ஆத்மா சாந்து அடைய முதலாம் ஆண்டு
நினைவு நாளில் நாரந்தனை கந்தசுவாமியின்
திருப்பாதங்களின் சமர்ப்பிக்கின்றோம்!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
இங்கனம் பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்,
சகோதரர்கள், உற்றார், உறவினர்கள்.
Deepest sympathy