Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 10 NOV 1962
விண்ணில் 23 AUG 2021
அமரர் வேலுப்பிள்ளை ஆனந்தசிவம் (சிவா)
வயது 58
அமரர் வேலுப்பிள்ளை ஆனந்தசிவம் 1962 - 2021 காரைநகர், Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். காரைநகர் களபூமி சத்திரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா லண்டனை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலுப்பிள்ளை ஆனந்தசிவம்  அவர்களின் 01ம் ஆண்டு நினைவஞ்சலி.

திதி:11/09/2022.

முதலாம் ஆண்டு நினைவலை!

ஓராண்டு ஒரு நிமிடமாக
கரைந்துவிட்டது தீராத ஏக்கத்துடன்
இன்னமும் துடிக்கின்றது
 எம் இதயம் உங்கள் இனிய
 புன்னகை மீண்டும்
ஒருமுறை காண்போமா...

தரணியில் எங்களை தவிக்கவிட்டு
 தனியாக நீங்கள் மட்டும்
எங்கு சென்றீர்கள்... நடந்தது
கனவாகாதா என ஏங்குகின்றோம்
 இல்லாளுக்கு தலைவன் இல்லை
 பிள்ளைகளுக்கு தந்தை இல்லை
 சூரியனே! நீ இன்றி
 எங்களுக்கு ஒளியே இல்லை...

இறைவனோடு நீங்கள்
கனத்த இதயத்தோடு நாங்கள்...
 உங்களை இழந்து வாழும் எங்கள்
 வலி காலத்தாலும் ஆற்ற முடியாதது...
 உங்கள் ஆத்ம சாந்திக்காக
வேண்டிப் பிரார்த்திக்கின்றோம்!

பிரிவால் வாடும் மனைவி, பிள்ளைகள்

தகவல்: குடும்பத்தினர்