யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வசிப்பிடமாகவும் கொண்ட வேலுப்பிள்ளை தையல்நாயகி அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
எங்கள் குடும்பத்தின் ஒளிதீபமே
அல்லும் பகலும் அழுதாலும்
ஆறுமா எம்துயரம்
எத்தனை ஆண்டுகள் சென்றாலும்
எம் நெஞ்சைவிட்டு நீங்காத
பாசத்தின் திருவுருவே
பொத்திப் பொத்தி உன்கையில்
பூவாக வளத்தாயே, எம் தெய்வமே
உச்சி மோர்ந்து எமக்கெல்லாம்
உணவூட்டி விட்டாயே
அம்மம்மா
உனை நினைக்கையிலே
எம்
நெஞ்செல்லாம் துடிக்கிறது.
குட்டிக்கதைகளும் அள்ளி அணைத்து
முத்தமிட்ட பாசமும், தோழிலும் மார்பிலும்
தூக்கிச் சுமந்த நாட்களும்,
நான் இன்னும் மறக்கவில்லை அம்மம்மா,
என்னைவிட்டு எங்கு சென்றீர்?
அம்மா என்று நான் அழைத்த நாட்களை விட
அம்மம்மா என்று அழைத்தது தான் அதிகம்
இனி யாரை நான் அழைப்பேன்?
தொலைதூரத்தில் இருந்தாலும்
தொலைபேசியில் நெருங்கி இருந்தோமே அம்மம்மா
இப்படி தொட்டுவிட முடியா தூரத்துக்கு
தொலைந்து போனது ஏன்?
அந்த பால் சிந்தும் அப்பம் இனியார்
எனக்கு சுட்டு தருவார்கள்?
முள் இல்லா மீன் பொரித்து - உம்
மகள்மார் காணாது சோற்றுக்குள்
ஒழித்து வைத்து தருவியே அம்மம்மா
இனி எனக்கு யார் தருவார்?
உண்மையை சொன்னால் நீங்கள் வைக்கும்
மாசிக்குழம்பின் வாசனையை
இதுவரைக்கும் உணர்ந்ததில்லை எங்கேயும்
இப்படி இன்னும் எத்தனையோ எண்ணில் அடங்காத
நினைவுகள் அம்மம்மா!