Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 28 FEB 1963
மறைவு 14 JUL 2025
திரு வேலாயுதபிள்ளை சோதீஸ்வரன்
வயது 62
திரு வேலாயுதபிள்ளை சோதீஸ்வரன் 1963 - 2025 கொடிகாமம், Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Recklinghausen, பிரித்தானியா Harrow ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை சோதீஸ்வரன் அவர்களின்  31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

அன்புத் தெய்வமே ஆருயிர் அப்பாவே!
அன்போடு எங்களை அனுதினமும்
அரவணைத்தாய் அல்லும் பகலும் அயராமல்
 எமை காத்தாய் உலகுக்கு நீ
 உத்தமனாய் வாழ்ந்து நின்றாய்!

 உயிரிலும் உணர்விலும் ஒன்றாக கலந்திருந்தாய்!
 உயிர் உள்ள வரை எங்களோடு
 இருப்பேன் என்றாய்!
 ஒன்றுக்கும் கலங்கவில்லை நாம்

 உன்னோடு இருந்தவரை உள்ளத்தில்
 பல கனவு ஒன்றாக நாமும் கண்டோம்
 கனவெல்லாம் நனவாகும் காலம்
வருமுன்னே கண்மூடி மறைவாய்
 என்று கனவிலும் நினைக்கவில்லை...

 உங்கள் ஆத்மா சாந்தி அடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி மதியபோசனம் 13-08-2025 புதன்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Victoria Hall, Sheepcote Rd, Harrow HA1 2JE, United Kingdom எனும் முகவரியில் நடைபெறும்.  

We invite you to join us for lunch in honour of our beloved father. 13th of August 2025 at 12.00pm at Victoria Hall, Sheepcote Rd, Harrow HA1 2JE, United Kingdom.

Parking Information:
Greenhill Way Car Park (HA1 1LD)
opposite Travelodge
PayByPhone location code is 802010

Davy House Car Park (Ground Floor)
Lyon Road, Harrow, HA1 2EX

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

சுலோஜினி - மகள்
சுபர்த்தினி - மகள்
ஜெயா - சகோதரன்
Tribute 16 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்