 
                     
        யாழ். பருத்தித்துறை தும்பளை வீதி கல்லடி ஒழுங்கையைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Herne ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வேலாயுதபிள்ளை நல்லம்மா அவர்கள் 22-09-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற தங்கமுத்து, சின்னத்தம்பி தம்பதிகளின் அன்பு மகளும்,
காலஞ்சென்ற வேலாயுதபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,
வை. சத்தியபாமா(ஜேர்மனி), காலஞ்சென்றவர்களான சத்தியரஞ்சினி, சத்தியசீலன் மற்றும் வே. சத்தியமோகன்(சுவிஸ்), வ. சத்தியவாணி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்றவர்களான துரைசாமி, அழகம்மா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வைகுந்தவாசன்(ஜேர்மனி), பிறேமராதா(சுவிஸ்), சிவசக்தி(சுவிஸ்), குமரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஜேர்மனியைச் சேர்ந்த வைத்திகா- கதீச்சன், வாகீசன், வானுசா, சுவிஸைச் சேர்ந்த சயந், ஷயாமா- சுஜந்த், சினோஜன், ரேகா, விவேகா, ஜோதிகா ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
அமிசா, சமீனா, கேன்சா சணா ஆகியோரின் பாசமிகு பூட்டியும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நாட்டின் தற்போதைய அசாதரண சூழ்நிலை காரணமாக குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே அன்னாரின் இறுதிக்கிரியைகளில் பங்கேற்க முடியுமென்பதை பணிவன்போடு அறியத்தருகின்றோம்.
அம்மா நல்லம்மா இந்த
பெயருக்கு எற்ற மாதிரியே
பேறுமை சேர்ந்த நல்லம்மா
முன் ஒரு காலத்தில் வறுமையில்
இருந்த உறவினர்களுக்கு
வயிரார உணவழித்த நல்லம்மா
உங்களின் நினைவுகள் எம்
உயிர் உள்ள வரை எம்
மனதில் வாழ்ந்து கொண்டு தான்
இருக்கும்
இனி ஒரு
ஜென்மம்
மானிடராக பிறந்து மீண்டும்
எமக்கு உறவினராக வரவேண்டும்
என்று எல்லாம் வல்ல
சிவநடியாரை பிராத்திக்கின்றோம்..
ஓம் நமசிவாய ஓம் நமசிவாய ஓம் நமசிவாய...........
நிகழ்வுகள்
- Monday, 27 Sep 2021 1:30 PM - 4:30 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
 
                     
                         
                         
                         
                         
                             
                     
                     
                     
                     
                     
                    
நல்லம்மாக்கா,எனது அம்மாபோலவே, நீங்கள் என்மீது காட்டிய அன்பை ஒருபோதும் என்னால் மறக்கமுடியாது. உங்கள் தெய்வீக ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கிறேன். ஜெயந்தி.உதயகுமார்