

-
27 AUG 1970 - 24 JUL 2022 (51 வயது)
-
பிறந்த இடம் : புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka
-
வாழ்ந்த இடம் : Zürich, Switzerland
திதி:31/07/2024.
யாழ். புங்குடுதீவு 12ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதபிள்ளை கெங்கராசன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனாலும்
ஆறாது நினைவலைகள்
அன்பு
கனிந்த முகமும் அமைதியான
உன் சிரிப்பும் கண்டு தந்தையும்
உடனழைத்துக் கொண்டனரோ,
நல்லவர்கள் வாழ
கொடுத்துவைக்காத
உலகமிது,
காலனை வென்றவர்கள்
காலத்தால் அழியாதோரே!
எங்கள் உயிருள்ளவரை
உங்கள்
நினைவுகளும்
அழியாது உடனிருக்கும்!
ஆண்டுகள் இரண்டு ஆன போதிலும்
நீங்களின்றிய துயரங்கள்
இன்னும் ஆறவில்லை !!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு
அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள்
இனியசொற்களும் இன்றியே
நாங்கள் இயல்பிழந்தோம் !!
இரண்டு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில்
உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா
என ஏங்குவோம் நாங்கள்!
வானுலகம் சென்றாலும் எம் வழித்துணையாவும்
என்றும் இருந்துவிடுவீர்கள் !!!
உங்கள் ஆத்ம சாந்திக்காய் பிரார்த்திக்கும்
அம்மா,மனைவி, பிள்ளைகள்,சகோதர சகோதரிகள்
மற்றும் குடும்பத்தினர்..!
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
புங்குடுதீவு 12ம் வட்டாரம், Sri Lanka பிறந்த இடம்
-
Zürich, Switzerland வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Notices
Request Contact ( )
