யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் விசாலாட்சி அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
அன்னை ஓர் ஆலயம் அதில்
அமர்ந்திருக்கும் தெய்வம் நீ!
பத்து மாதம் கருவறையில்
கலங்காமல் காத்தவள் நீ!
கள்ளம் கபடமற்ற உள்ளத்தில் உதித்த எம்மை
கண்கண்ட தெய்வமாய் காத்தவள் நீ!
அம்மா என்றாலே அரவணைப்பு அன்பு
அன்பினிலக்கணம் நீயே எம் அன்னை!
கஸ்டங்கள், துன்பங்கள்! எது வந்தபோதும்
கல்வி புகட்டி நற்சான்றோராய் நானிலம் மதிக்க
வெற்றியோடு போராடிய புண்ணியவதியே!
உங்களை நினைக்கும் போது அழும்
கண்ணீரை நாங்கள் துடைத்தாளும்
எங்கள் இதயத்தின் வலி நிரந்தரமானது!
கண்ணுக்குள் மணிபோல் இமைபோல்
காத்தாயே அம்மா!
உங்களை காலன் எனும் பெயரில் வந்தவன்
களவாடி சென்றதேனோ!
நீங்கள் விண்ணில் கலந்த நாள் முதல்
எங்கள் விளிகள் உங்களையே
தேடுகின்றதே அம்மா!
உங்கள் பிரிவால் வாடும் அன்புப் பிள்ளைகள், மருமக்கள்,பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறோம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்