யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் விசாலாட்சி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலி.
31ம் நாள் அல்ல ஓர் ஆயிரம் ஆண்டுகள் சென்றாலும்,
நாம் உம்மை எப்படி மறப்போமம்மா!
தாங்காத வலியோடு தவிக்கின்றோமோ அம்மா!
பரணியில் உம்மை காண்பது எப்போ அம்மா!
உயிருக்கு உயிராய் இருந்த எங்கள் தாய்த் தெய்வமே
உங்கள் திருமுகம் காணமல் போனது தான் என்னவோ?
உங்கள் கருவில் எங்களை சுமந்து எங்களுக்கு
உயிர் கொடுத்த தாய் தெய்வமே!
கருனை வடிவமான எங்கள் தெய்வமே!
அன்றிலும் பேடும் போல இனை பிரியா எங்கள்
தெய்வத்தை இழந்து கலங்கி நிற்கின்றோம்!
எங்கள் இறுதி மூச்சு இருக்கும் வரை ஆத்மா சாந்தியடைய
பட்டையார், துர்க்கை அம்மனை வேண்டி நிற்கின்றோம்!
ஓம் சாந்தி ! ஓம் சாந்தி ! ஓம் சாந்தி !
உம்மை மறக்க முடியாமல் உங்கள் பிரிவால் வாடும்
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள்.
அன்னாரின் இழப்புச் செய்தியைக் கேட்டு உடன் வந்து எமக்கு ஆறுதல் வார்த்தைகள் கூறியவர்களிற்கும், எம்முடன் சேர்ந்து துன்பதுயரங்களை பகிர்ந்து கொண்டவர்களிற்கும், இறுதிக்கிரியைகளில் கலந்து கொண்டவர்களிற்கும், நேரடியாக வந்தும் தொலைத்தொடர்பு சாதனங்கள் மூலமாகவும் அனுதாபங்களை தெரிவித்தவர்களிற்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம். அத்துடன் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறோம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்