2ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலாயுதர் காசிநாதர்
ஓய்வுபெற்ற வயோதிபர் இல்ல பணியாளர்
வயது 75

அமரர் வேலாயுதர் காசிநாதர்
1944 -
2020
கைதடி கிழக்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கைதடி கிழக்கைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதர் காசிநாதர் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆசையாய் எம்மைப் பெற்று வளர்த்து
சிறப்பாய் அறிவும் பண்பும் புகட்டி
வாழ வைத்த எங்கள் அப்பாவே!
விதி என்னும் இரண்டு எழுத்து உங்களை
வேரோடு சாய்த்து ஆண்டுகள் இரண்டு ஆனதே ஐயா ...!
ஆறுமோ எங்கள் துயரம் மாறுமோ உங்கள் நினைவு ...!
கடந்து விட்ட இரண்டு ஆண்டுகளில் கலங்காத நாளில்லை ......
காலத்தின் கோலம் எங்களிடமிருந்து பிரித்து விட்டாலும்
எந்நாளும் எம்மனதில் காவியமாய் வாழ்கின்றீர்கள் ஐயா ..!
கனவாகிப் போகாதோ நீங்கள் மண்ணை விட்டு
விண்ணுலகு சென்றது என்று ...???
தினம் தினம் பிரிவுத் துயரால் விழி நீரில் வலி சுமந்த
நினைவுகளோடு வாழ்கின்றோம் ஐயா ..!
உங்கள் ஆத்மா சாந்தி பெற
இறைவனை வேண்டி நிற்கின்றோம்..
தகவல்:
குடும்பத்தினர்