3ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
10
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் தனபாலன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டாயிரம் சென்றாலும்
ஆறாதப்பா எமதுள்ளம்
ஆறாத துயரம் இன்னும் –
நெஞ்சில் நீராக நின்றெரியுதப்பா!
பாசமென்றால் எதுவென்று நாமறிய
பண்பில் உயர்ந்து நின்றாய்
நேசமிது தானென்று – எங்கள்
நெஞ்சமதை நெகிழ வைத்தாய்!
உங்களை உருக்கி எங்களை
உருவாக்கிய உன்னதமே!
உயர்வான வாழ்வுதனை எமக்கு
உளமார அமைத்திட்டீர்கள்!
உங்களை வாழவைக்கும் காலம்
இனி என நாம் மகிழ்வுற்று
இருக்கையிலே காலனவன்
செய்த சதி இதுவோ?
அப்பா நாம் மறக்கவில்லை உம்மை
என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்...
தகவல்:
குடும்பத்தினர்