
திதி:19-02-2025
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Langenthal ஐ வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் தனபாலன் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு இரண்டு ஓடி மறைந்திட்டாலும்
நேசங்கொண்ட நாங்கள் உங்களைத் தேடுகின்றோமே
உங்கள் வருகை காணாது உங்கள் குரல் கேட்காது
ஏங்கி தவிக்கின்றோமே!
பாசமிகு இல்லற வாழ்வைவிட்டு,
விரைந்து எங்குதான் சென்றீர்களோ?
இறகு இழந்த பறவையாய் தவிக்கின்றோமே!
பாசமாய் கூடி வாழ்ந்த கூட்டை விட்டு
எங்குதான் பறந்து சென்றீர்களோ?
உங்கள் சிரிப்பும் உயர்வான பேச்சும்
என்றும் எங்களைவிட்டு நீங்காது
உங்கள் நினைவால் தினம் கலங்கி நிற்கின்றோமே!
மீண்டும் எங்களிடம் வருவாயா என்று
ஏங்கி தவித்து நிற்கின்றோமே!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்திக்கின்றோம்...
என்றும் உங்கள் நினைவில்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், குடும்பத்தினர்....