5ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் வேலன் அப்புக்குட்டி
வயது 80
Tribute
1
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். மீசாலையைப் பிறப்பிடமாகவும், எழுதுமட்டுவாள், இத்தாலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வேலன் அப்புக்குட்டி அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 17-03-2023
அன்பின் இருப்பிடமே
பாசத்தின்
உறைவிடமே
எங்கள் அப்பா
ஆசையாய் இருக்குதப்பா
சிரித்த
உங்கள் முகம் பார்க்க வந்திட மாட்டீர்களா?
உங்களுக்கு நிகர் வேறு யாரப்பா?
ஐந்து வருடம் விரைந்தே போனதப்பா
நீங்கள் எங்களுடன் வாழ்வதாய்
நினைத்தே
நாம் வாழ்கின்றோம்-ஆனாலும்
உங்கள் முகம் பார்க்க துடிக்கும்
வேளையில்
நெஞ்சில் இரத்தம்
சுண்டுதப்பா
வீசும் காற்றினிலும் நாம்
விடும் மூச்சினிலும்
எட்டு திக்குகளிலும்
உங்கள் நினைவால் வாடுகிறோம் அப்பா!
உங்கள் இழப்பை ஈடு செய்ய முடியாமல்
தவிக்கின்றோம்
மீண்டும் பிறந்து
வருவீரா எம் அன்பு அப்பாவே!
தகவல்:
நிதி- மகள்(கனடா)