வவுனியா கள்ளிக்குளத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது ஐக்கியா அமெரிக்காவை வசிப்பிடமாகவும் கொண்ட வீரபாகு பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், ஆத்மசாந்திக் கிரியையும்.
எங்கள் குடும்பத்தின் ஆணிவேரே!
கண்மூடி முளிக்குமுன்னே
எம்மைக் கடந்து விட்டாய் நாட்கள் முப்பது ஆனதே!
என்றென்றும் எங்களுடன் இணைந்திருப்பீர்கள்
என எண்ணிலாக் கணவுகள் கண்டிருந்தோம்!
இடை நடுவில் எம்மைத் தவிக்கவிட்டு
ஏன் அம்மா மறைந்து விட்டீர்கள்?
காலன் உங்களைக் காலத்தால் அழைத்த வேளை
அத்துன்பத்தை எற்றுக்கொள்ள் எம் மனத்தால்
முடியவில்லை!
விதி செய்த சதிதானே என்று எம் மனது
எண்ணினாலும் எம் இதயங்களில் என்றும்
நீங்கள் குடியிருப்பீர்கள்!
எம் வாழ்வுள்ள வரை நிழலாய் நிங்கள்
தொடர்வீர்கள்!
கல்லறை வாழ்வில் நெடுங்காலம் சென்றாலும்
எங்கள் நெஞ்சறைக் கூட்டில் அழியாத ஓவியம்
அம்மா நீங்கள்!
இன்னொரு பிறப்பு இருப்பது உண்மையென்றால்
அப்போதும் நீஙகள் எங்கள் அம்மாவாக வர
வேண்டும் என்ற வார்த்தையே வேண்டுகின்றோம்
பிள்ளைகள்
சிவா, ராணி, குமாரி, கரன்
My deepest condolences 💐