5ம் ஆண்டு நினைவஞ்சலி
![](https://cdn.lankasririp.com/memorial/notice/203417/2059bbea-35ec-4a7d-aff2-07d0429a7799/25-67a9e0ef4912c.webp)
அமரர் வீரவாகு மயில்வாகனம்
ஓய்வுபெற்ற S.B.O மின்சாரவாரியம்
வயது 85
Tribute
7
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்கங்குளம் வீதியைப் பிறப்பிடமாகவும், கச்சேரி வீதியை வதிவிடமாகவும் கொண்டிருந்த வீரவாகு மயில்வாகனம் அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஐந்து ஆனதப்பா
ஆறவில்லை எங்கள் மனம்
ஆயிரம் உறவுகள் அரவணைக்க இருந்தாலும்
அப்பா என்ற அன்பிற்கு ஈடாகுமா?
எங்கள் உயிர் மூச்சாய்
எம்மோடு வாழ்ந்திருந்த ஐயாவே
எமையெல்லாம் விட்டு
இறைவன் அருகில் சென்றீரோ!
வரமாக எமக்கு கிடைத்த ஐயாவே
வளமாக எமைக் காத்த ராஜாவே
உமை வருத்தி எமைச் சுமந்தீர்
உண்மை அன்பை எமக்களித்தீர்!
நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..!
தகவல்:
உங்கள் பிரிவால் வாடும் மனைவி,பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.