Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
மண்ணில் 15 JUN 1943
விண்ணில் 28 SEP 2021
அமரர் வீரசிங்கம் தயாபரன் (இராசுகுட்டி)
அமரர் வீரசிங்கம் தயாபரன் (இராசுகுட்டி)முன்னாள் சுகாதார மேற்பார்வையாளர்- யாழ். மாநகர சபை, கட்டிட பட வரைஞர், நில அளவையாளர்- ஓமான், கல்ரெக்ஸ் பணியாளர்- அவுஸ்ரேலியா, முன்னாள் யாழ் பரியோவான் கல்லூரி, யாழ். மத்திய கல்லூரி மாணவர்
வயது 78
அமரர் வீரசிங்கம் தயாபரன் 1943 - 2021 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 11 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். நல்லூர் முத்திரைச் சந்தையைப் பிறப்பிடமாகவும், அவுஸ்திரேலியா சிட்னி ஐ தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரசிங்கம் தயாபரன்  அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறாத துயரோடு அணையாத
 தீபத்தைப்போல் உங்கள்
நினைவலைகள் கலந்த நெஞ்சோடு
 வாழ்கின்றோம் நினைவு என்ற
 காற்றசைய– எங்கள் நெஞ்சில்
எழும் அனலோடு– உங்கள்
 
நினைவுகளை சுமந்தபடி
வழியனுப்பி வைக்கின்றோம்
 எங்கள் ஈர விழியோடு இன்று
பிரிவு எனும் துக்கத்தினால் ஓர்
ஆண்டு சென்றாலும் உங்கள் உடல்
மட்டும் தான் அழிந்தது தந்தையே!

நீங்கள் எங்களை பிரிந்தாலும்
எங்கள் ஒவ்வொரு அசைவிலும்
நீங்கள் வாழ்ந்துகொண்டிருப்பீர்கள்!!

உங்களது ஆத்மா சாந்தியடைய
 இறைவனை பிரார்த்திக்கின்றோம்!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

Notices

மரண அறிவித்தல் Wed, 29 Sep, 2021