Clicky

31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
மண்ணில் 24 APR 1960
விண்ணில் 04 SEP 2024
திரு வீரசிங்கம் மகாலிங்கம் (சிவா)
வயது 64
திரு வீரசிங்கம் மகாலிங்கம் 1960 - 2024 மண்டைதீவு, Sri Lanka Sri Lanka
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், பால்பண்ணை வீதி திருநெல்வேலி, Troyes பிரான்ஸ் ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வீரசிங்கம் மகாலிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

ஆலமரமொன்று அடி சாய்ந்ததே!
வேரோடு விழுந்து விட்ட பெரு விருட்சமே!
 எம்மை பாரோடு தவிக்க விட்டு பாதியிலே போனதேனோ!
 வானத்து நிலவாய் வலம் வந்து அரும்பணியாற்றிய எங்கள் அற்புதமே!
 இப்பிறவியில் அல்ல எப்பிறவியிலும் நாம் காணோம்!
 உங்களைப் போன்றதொரு அன்பான உறவை
  இழந்து தவிக்கும் எங்கள் நிலையை பாருங்கள்!
இனி நாங்கள் இப்பூமியில் உங்கள் புன்னகை கூடிய சிரித்த முகத்தை எப்போ பார்ப்போம்!
எங்கு காண்போம்!
உற்றவர் சுற்றமும் கூடிக்கழித்த உறவுகளை கைவிட்டுச் சென்றதேனோ!
 உங்கள் பிரிவால் வாழ்கின்ற உள்ளங்களைத்
தேற்ற மொழியின்றி தவிக்கின்றோமே!
 நின் உறவின் அடி தேடித் துடிக்கின்றோமே!
 மீளாத்துயில் கொண்டு எம்மை ஆறாத்துயரில்
ஆழ்த்தி விட்டீர்களே!
கலையாத நினைவுகளுடன் கண்ணீர் பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தி அடைய 

இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.....

உங்கள் பிரிவால் துயருறும் அன்பான குடும்பத்தினர்....!!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம். 

அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 04-10-2024 வெள்ளிக்கிழமை அன்று நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

கலா - மனைவி
கஜந்தா - மகள்
பபியன் - மருமகன்
கௌஷன் - மகன்
ஸ்டீபன் - மகன்
ஸ்டீபன் - மகன்
ஈசா - சகோதரி
வினோதன்(குட்டி) - மருமகன்
Tribute 11 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.

கண்ணீர் அஞ்சலிகள்