Clicky

நன்றி நவிலல்
மண்ணில் 10 APR 1932
விண்ணில் 04 JAN 2022
அமரர் வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை)
வயது 89
அமரர் வீரசிங்கம் எலிசபேத் 1932 - 2022 நாவாந்துறை, Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். நாவாந்துறையைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை வசிப்பிடமாகவும் கொண்ட வீரசிங்கம் எலிசபேத் அவர்களின் நன்றி நவிலல்.

“இருள் சூழ்ந்த பள்ளத்தாக்குகளில் நான் நடக்க நேர்ந்தாலும்
அஞ்சேன். ஏனெனில் நீர் என்னோடிருக்கின்றீர்”
(சங்.22:4) 

ஆண்டவரே என் ஆயன் எனக்கேதும் குறையில்லை.என் கடவுளே உம்மில் நம்பிக்கை கொள்கிறேன். வாழ்வோ, சாவோ உம்மிடமிருந்து எம்மைப் பிரிக்க முடியாது என்ற இறைமகன் இயேசுவில் விசுவாசம் வைத்து வாழ்ந்து எம்மை விட்டுப் பிரிந்த S.EJ வீரசிங்கம் எலிசபேத் (மேரிப்பிள்ளை) அவர்களின் ஆன்ம இளைப்பாற்றிக்காக உம்மிடம் இரந்து நிற்கின்றோம்.

வாழ்வு எனும் மாபெரும் கொடையை நீர் அவருக்கு அளித்தீர், அதன் பயனை இவ்வுலகில் அனுபவிக்கச் செய்தீர். சிறந்த மகளாக, சகோதரியாக,மனைவியாக,தாயாக, பேத்தியாக, பூட்டியாக, பல உறவுகள் ஊட்டம் பெறச் செய்தீர். இவற்றிற்காக உமக்கு நன்றி கூறுகின்றோம்.

உலகம் முடியும் வரை எந்நாளும் நான் உங்களோடு இருப்பேன் என்று திருவாய் மொழிந்த என் தேவனே எம்மோடு வாழ்ந்த எலிசபேத் (மேரிப்பிள்ளை) எனும் அடியாளை உன் வான்வீட்டில் அமைதியாக வாழ்ந்து முடிவில்லாத் விண்ணக வாழ்வையும் புனிதர்களி்ன் தோழமையையும் நிறைவாய் பெற வேண்டுமென்று உம்மை இரந்து மன்றாடுகின்றோம். ஆமென்

இவரின் பிரிவால் துயருறும் மக்கள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள். 

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 5 people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.