5ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயனைப் பிறப்பிடமாகவும், உடுத்துறையை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வீரகத்தி சண்முகையா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி:26/06/2024
அன்பின் சிகரமே பண்பின் இலக்கணமே
பாசத்தின் ஊற்றே பார்போற்றும் உத்தமரே
மார் மேலும் தோள் மேலும் சுமந்து மகிழ்ந்தவரே
எம் நெஞ்சத்தில் நிறைந்த நியமான தெய்வமே..
உம் பிரிவுத் துயர் எமைத் தினமும் வாட்டுதப்பா
உமையிழந்த செய்தியால் மனம் தடுமாறுதப்பா
மறைந்து போனாலும் என்றும் மறைந்து போகாத
அன்பைக் காட்டிச் சென்றவரே
உம் கம்பீரத் தோற்றமும் உம் கம்பீரத் தொனியும்
அரவணைக்கும் பண்பும் என்றும்
எம்மனதை விட்டகலாதப்பா
அப்பா உங்கள் உணர்வுகளுக்கு மதிப்பளித்து
எம் நன்றிகளை தங்கள் பாதக்கமலங்களில்
காணிக்கையாக்கி ஆன்மா சாந்திபெற
ஆண்டவனை வேண்டுகின்றோம்...
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
தகவல்:
குடும்பத்தினர்