யாழ். வடமராட்சி கிழக்கு வத்திராயனைப் பிறப்பிடமாகவும், உடுத்துறையை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி சண்முகையா அவர்கள் 22-06-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற வீரகத்தி மற்றும் கட்டப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை மற்றும் இரத்தினம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
புவனேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
குகதாசன், றமேஸ், சுபாஸ், விஜிதரன் ஆகியோரின் அன்புத் தந்தையும்,
கௌரி, கஜேந்தினி, லோஜிதா, அமுதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தெய்வநாயகி மற்றும் சிவகாமிப்பிள்ளை, கருணாநிதி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
காலஞ்சென்ற வேலும்மயிலும் மற்றும் துரைராசசிங்கம், பத்மாவதி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற டிலக்சனா மற்றும் தர்சன், சுஜிதன், கீர்த்தனா, சுடர்னா, ரிஸ்மிகா, தனுறா, தஷாரா, பிரதீப் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 24-06-2019 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் உடுத்துறை இந்து மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.