Clicky

மரண அறிவித்தல்
பூவுலகில் 04 JAN 1958
விண்ணுலகில் 14 APR 2024
அமரர் வீரகத்தி குமரகுருபரன் (குமரன், பரம்)
முன்னாள் நூலகர், பிரதேசசபை ஊர்காவற்துறை, முன்னாள் பிரபல கணிதபாட ஆசிரியர் யாழ், கொழும்பு, நாரந்தனை ஊரோடு உறவாட குழுமத்தின் செய்தி ஆசிரியர், ஆலோசகர்
வயது 66
அமரர் வீரகத்தி குமரகுருபரன் 1958 - 2024 நாரந்தனை, Sri Lanka Sri Lanka
Tribute 16 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.

யாழ். நாரந்தனையைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, இத்தாலி Napoli ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட வீரகத்தி குமரகுருபரன் அவர்கள் 14-04-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வீரகத்தி முத்துப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான அந்தோனி பவுலீனம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

ஜெம்மா(குஞ்சு) அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

ஜீவநாத், ஜீவிதன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகேஸ்வரி, நாகமுத்து, சண்முகலிங்கம், இராஜேஸ்வரி மற்றும் அருளானந்தசிவம்(இத்தாலி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற சரவணபவன் மற்றும் சிவபாக்கியம், ஈஸ்வரி, காலஞ்சென்றவர்களான சண்முகலிங்கம், ஜெட்றூட், ஜேம்ஸ் மற்றும் சிசிலியா, காலஞ்சென்ற சேவியர் மற்றும் றீற்றா, மொறின் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், மொணிக்கா மற்றும் புலேந்திரராஜா, றொட்ணி ஆகியோரின் சகலனும்,

யாழினி, கமலினி, வாசுகி, செரோன், சஞ்சீவன், குயின்ரஸ், றெஜி ஆகியோரின் சித்தப்பாவும்,

மலர்விழி, மங்கை, றஞ்சித், விஜித், ஜெயா, சுஜித் ஆகியோரின் மாமாவும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

நேரடி ஒளிபரப்பு: Click Here

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ராஜா - சகலன்
ஜெம்மா - மனைவி
மொறின் - மைத்துனி
கமலினி - பெறாமகள்

Photos

Notices