

யாழ். இணுவில் மஞ்சத்தடியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட வைத்திலிங்கம் லிங்கேஸ்வரன் அவர்கள் 27-08-2019 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.
அன்னார், வைத்திலிங்கம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற சோமசுந்தரம், சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நாகேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,
கார்த்திகா(லண்டன்), நரேஸ்குமார்(சிங்கப்பூர்), தினேஸ்குமார்(பொறியியலாளர், மெறட்டுவ பல்கலைக்கழகம்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,
தே. சசிகரன் அவர்களின் அன்பு மாமனாரும்,
ரஞ்சனிதேவி, விக்னேஸ்வரன், சண்முகேஸ்வரன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
சண்முகலிங்கம், ஜெகதீஸ்வரி, உஷா ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சாயினி அவர்களின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 28-08-2019 புதன்கிழமை அன்று மு.ப 11:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் காரைக்கால் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
லிங்கேஸ் அண்ணா குடும்பத்தினருக்கு எங்கள் ஆழ்ந்த அனுதாபங்கள்.. அண்ணாவின் ஆத்மா சாந்தியடைய பிரார்திக்கிறோம்? கருணானந்தம் குடும்பத்தினர்