
யாழ். உரும்பிராய் கிழக்கு சிவன்வீதியைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வசந்தி பத்மநாதன் அவர்களின் 3ம் ஆண்டு நினைவஞ்சலி.
காலங்கள் ஓடுதே!
உந்தன் எண்ணங்கள்
வந்தென்னை வாட்டுதே!
எந்தன் பாசமலரே
உங்களைப்
பிரிந்து மூன்றாண்டுகள்
ஓடி மறைந்து விட்டன.
நீங்கள் மறைந்தும்
என் மனதில் தினம் தினம்
வந்து கொண்டேயிருக்கின்றீர்கள்.
நீங்கள் இன்று இல்லையென்பதை
இக்கணமும் நம்ப மறுக்கிறது.
எம்குடும்பத்தில் ஏழுபேர் நாங்கள்.
அதில் நான்காவதாய்
நீங்கள் பிறந்துதித்தாலும் ,
அன்பிலும் , அரவணைப்பிலும்,
பண்பிலும், பாசத்திலும்
நீங்கள் மூத்தவளே!
அக்கா நீங்கள்
எங்கள் குடும்பத்திற்காகவே
உங்கள் வாழ்நாளை அர்ப்பணித்தீர்கள்.
நாங்கள் புலம்பெயர்ந்த போதும்
அம்மா அப்பாவை
கண் கலங்காமல்
வைத்து காப்பாற்றினீங்கள்.
அக்கா என்று மூன்றெழுத்தில்
உங்களை சுருக்கி விட
என்னால் முடியாதுள்ளது.
அக்கா ! நீங்கள் எமக்கு
இரண்டாவது தாய்.
காண்பேனோ இனி உங்களை!
இன்னும் எத்தனை ஜென்மங்கள்
பிறந்தாலும் எம்மோடு வந்து
பிறந்திடுங்கள் அக்கா.
ஓம் சாந்தி, சாந்தி.
Rip