யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வசந்தாதேவி கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31 ஆம் நாள் நினைவு நிகழ்வும், ஆத்ம சாந்திப்பிரார்த்தனையும் எதிர்வரும் 25-06-2023 ஞாயிற்றுகிழமை அன்று முற்பகல் 11:30 மணி முதல் 03:00 மணிவரை
Nower Hill High School George V Avenue, Pinner, HA5 5RP என்ற முகவரியில் நடைபெற இருப்பதால் அன்றைய தினம் தாங்கள் தங்களின் குடும்ப சகிதம் பிரார்த்தனையிலும், மதிய போசன நிகழ்விலும் கலந்து கொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.