Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 APR 1954
இறப்பு 21 MAY 2023
அமரர் வசந்தாதேவி கந்தசாமி (வசந்தா டீச்சர்)
இளைப்பாறிய ஆசிரியை- உரும்பிராய் சைவத்தமிழ் பாடசாலை மற்றும் இணுவில் சைவப்பிரகாச வித்தியாலயம்
வயது 69
அமரர் வசந்தாதேவி கந்தசாமி 1954 - 2023 கோண்டாவில் மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 18 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

திதி: 07-06-2024

யாழ். கோண்டாவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொழும்பு, பிரித்தானியா லண்டன் Harrow ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தாதேவி கந்தசாமி அவர்களின் முதலாம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் இதயமென்னும் கோயிலில்
 தெய்வமாய் நிறைந்திட்ட அன்னையே!
 நம்பமுடியவில்லை ஓராண்டு கடந்ததை

ஆண்டு போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இல்லா வீடானேன் எம்தாயே!

 துயரம் துடைத்த தாயவளே
இன்பம் இழைத்த இனியவளே
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எனக்கு உன்னைப்போல் யார் உள்ளார்!

 எல்லாமே கடந்து போகும் என்பார்கள்
கடந்தது பன்னிரு மாதங்கள் மட்டுமே தான்

 அழுதழுது தேடுதம்மா எம் விழிகள்
 உங்களைக் காண்பதற்கு ஒருமுறை வருவீர்களோ!

 எத்தனை ஆண்டுகள் கடந்தாலும்
எமது மனம் உங்களை தேடிக்கொண்டே இருக்கும்
என்றும் உங்கள் நினைவுகளுடன்
 குடும்பத்தினர்...

அன்னாரின் திதி 07-06-2024 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 11:30 மணியளவில் பிரித்தானியாவில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெறும்.

தகவல்: குடும்பத்தினர்