Clicky

2ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 06 MAR 1951
மறைவு 22 OCT 2021
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை
முன்னாள் ஆசிரியை
வயது 70
அமரர் வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை 1951 - 2021 யாழ்ப்பாணம், Sri Lanka Sri Lanka
Tribute 28 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ்ப்பாணத்தைப் பிறப்பிடமாகவும், நெடுந்தீவு, கிளிநொச்சி கண்டாவளை வசந்தபுலம், யாழ். சுண்டிக்குழி ஈச்சமோட்டை, கனடா Toronto ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்டிருந்த வசந்தகுமாரி அந்தோனிப்பிள்ளை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.  

ஆண்டுகள் இரண்டானதம்மா
 ஆறாத உன் ஞாபகங்கள் மீண்டும்
 மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்

மெளனமாய் அழுகின்றோம்
 உன் அன்பான பேச்சும்
 இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை

கணப்பொழுதில் கண்மூட
 உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
 நீ இல்லாத வாழ்க்கையை

காலங்கள் போகலாம்
 காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…

உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம்

உங்கள் ஆத்மா சாந்திபெற
 இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..     

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Mon, 25 Oct, 2021
நன்றி நவிலல் Sun, 21 Nov, 2021