Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 27 APR 1950
இறப்பு 21 FEB 2025
அமரர் வசந்தகுமாரி இரத்தினசிங்கம் (மணி)
வயது 74
அமரர் வசந்தகுமாரி இரத்தினசிங்கம் 1950 - 2025 நல்லூர், Sri Lanka Sri Lanka
Tribute 4 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

திதி:அபர நவமி (12-03-2026)

யாழ். நல்லூர் வடக்கு விநாயகர் வீதி சந்திரசேகரப் பிள்ளையார் கோவிலைப் பிறப்பிடமாகவும், கனடா Toronto வை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட வசந்தகுமாரி இரத்தினசிங்கம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

உதரத்துள் உயிர்தந்து
உதிரத்தைப் பகிர்ந்தளித்தீர்
உதட்டோரப் புன்னகையால்
இன்முகம் மலர்ந்திடுவீர்

அன்பான மொழிபேசி
உறவுகளை அரவணைத்தீர்
மனைவி என்ற சொல்லுக்கு
அர்த்தமாய் வாழ்ந்திட்டீர்

ஓராண்டும் கடந்ததம்மா
ஒருயுகம் போல் உள்ளதம்மா
நனவுபோல் இல்லையம்மா
கனவுபோல் இருக்குதம்மா !

வாழ்ந்திடும் காலமெல்லாம்
இனி உன் துயரந்தான்
வழிந்தோடும் கண்ணீரை
உன் காலடியில் சேர்க்கின்றோம்

உங்கள் பிரிவால் வாடித்துடிக்கும் கணவர் இரத்தினசிங்கம்


எனது மனைவியின் முதலாம் ஆண்டு திவசம் வருகின்ற 12-03-2026 வியாழக்கிழமை அன்று காலை 11:00 மணியளவில் ஸ்ரீ சந்திரமௌலீஸ்வரர் சிவாலயத்தில் நடைபெறவுள்ளது. தாங்கள் அனைவரும் தவறாது வருகை தந்து, பகல் 12:00 மணிக்கு நடைபெறும் சிவனாரின் பூஜையிலும் கலந்துகொண்டு, அதனைத் தொடர்ந்து நடைபெறும் அன்னதானத்திலும் சிறப்பிக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

தகவல்: கணவர்

Summary

Photos

No Photos

Notices

மரண அறிவித்தல் Sat, 22 Feb, 2025