Clicky

நன்றி நவிலல்
பிறப்பு 21 APR 1969
இறப்பு 19 APR 2021
அமரர் வசந்தாதேவி வீரசிங்கம் 1969 - 2021 புங்குடுதீவு 1ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 1ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி இராமநாதபுரம் புதுக்காட்டை வாழ்விடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வாழ்விடமாகவும் கொண்ட வசந்தாதேவி வீரசிங்கம் அவர்களின் நன்றி நவிலல்.

உயிர் கொடுத்த உத்தமியே
நீர் சென்று 31 நாட்கள் கடந்தனவே
கண்ணிமைக்கும் பொழுதினிலே
ஒரு திங்கள் ஒரு அலையாய் கடந்துவிட
ஆறவில்லை தாயே! தீரவில்லை துயரம்!
தந்தையோடு தாயையும்
இழந்து நிற்கும் நம் துயரம்
காண்பாயே ஈஸ்வரனே!
இதயம் ஈர்த்த அம்மாவே!
உறவுகளிற்கு உற்றவளாய்
பண்போடும் பாசத்தோடும்
வாழ்ந்த நினைவுகள்
என்றும் எம்மை விட்டு நீங்காதம்மா!
அமைதியாய் உறங்குதாயே!!!
ஓம் சாந்தி சாந்தி சாந்தி...

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர்
Tribute 1 people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.