யாழ். உடுப்பிட்டியைப் பிறப்பிடமாகவும், கனடா Brampton ஐ வசிப்பிடமாகவும் கொண்ட வரூபன் தனபாலசிங்கம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
ஆறாத துயரம் கண்டோமே ஆண்டவரே!
எம் ஆருயிர் துணைதனை இழந்து....!!
நாட்கள் 31 ஆனதுவோ
உங்கள் முகம் கண்டு
ஏற்க முடியவில்லை உங்கள் இழப்பை
எம் கண்களில் ஈரம்
நிரந்தரமானதோ என்னவோ……
இன்னமும் காயவில்லை !
கணப் பொழுதும் எண்ணவில்லை
எம் கலங்கரை விளக்கே!
சுவாசிக்க சுவாசம் இல்லை
நேசிக்க யாரும் இல்லை
நெஞ்சம் எல்லாம் வலிகளுடன்
நிஜங்களைத் தேடுகின்றோம்உங்கள் நினைவுகளில்
எம் கண்கள் உடைந்து
கண்ணீர் இன்றும் பெருகுதையா!
கண்ணை மூடி நினைக்கின்றோம்
கண்ணிருந்தும் கடவுள்
உமை காண வரம் கொடுக்கலையே!
எம் உயிரான உமக்கு
மலர்ச்சாந்தியாக செலுத்துகின்றோம்.....!
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
My condolences to his family and friends. he was a wonderful person. May he rest in peace .