Clicky

1ம் ஆண்டு நினைவஞ்சலி
தோற்றம் 11 DEC 1951
மறைவு 30 JUN 2021
அமரர் வைத்தியநாதர் அருள்நாதன் (அருள்)
வயது 69
அமரர் வைத்தியநாதர் அருள்நாதன் 1951 - 2021 ஈச்சமோட்டை, Sri Lanka Sri Lanka
Tribute 15 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். ஈச்சமோட்டையைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் La Plaine Saint-Denis ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வைத்தியநாதர் அருள்நாதன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

முதலாம் ஆண்டு நினைவு நாள் வந்ததோ?
 ஒவ்வொரு நிமிடமும் உன் நினைவுதான் அப்பா!
 ஆயிரம் உறவுகள் இருந்தாலும் - அப்பா என
 அழைப்பதற்கு நீங்கள் இல்லையே அப்பா!

கனகாலம் எம்மோடு கரிசனையாய்
 வாழ்வீர்கள் என்று நம்பி இருந்தோம்!
 கணப்பொழுதினில் வந்த செய்தி
 எங்களை எல்லாம் கதி கலங்க வைத்ததப்பா!

வாழ்நாள் முழுவதும் உங்களை
 நினைக்கும் போதெல்லாம் உங்கள்
 நினைவுத் துளிகள் விழிகளின்
ஓரம் கண்ணீராய் கரைகின்றதப்பா..!!

என்றும் கலையாத நினைவுகளுடன்
உதிரும் கண்ணீர் பூக்களால்
 உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டி எங்கள்
 கண்ணீர்த் துளிகளைக் காணிக்கையாக்குகின்றோம்..!

தகவல்: குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

மரண அறிவித்தல் Fri, 02 Jul, 2021