யாழ். கொடிகாமம் கச்சாய் வீதியைப் பிறப்பிடமாகவும், புத்தளம் தில்லையடியை வசிப்பிடமாகவும் கொண்ட வர்ணராஜா யோகரஞ்சி அவர்கள் 27-07-2020 திங்கட்கிழமை அன்று காலமானார்.
அன்னார், அப்புக்குட்டி கணபதிப்பிள்ளை அன்னரத்தினம் தம்பதிகளின் அன்பு மகளும், வேலுப்பிள்ளை தியாகராஜா பஞ்சவர்ணம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,
வர்ணராஜா தியாகராஜா அவர்களின் அன்பு மனைவியும்,
டிவசங்கர், நிலோஜா ஆகியோரின் அன்புத் தாயாரும்,
காலஞ்சென்ற யோகலிங்கம், யோகேஸ்வரன்(பிரான்ஸ்), காலஞ்சென்ற யோகமூர்த்தி, யோகம்பிகை , யோகானந்தன், யோகமனோகரி(கொலண்ட்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
வர்ணமோகன்(சுவிஸ்), காலஞ்சென்ற வர்ணநேசன், வர்ணகாந்தன்(கனடா), வர்ணசந்திரன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மைத்துனியும் ஆவார்.
அன்னாரின் பூதவுடல் 28-07-2020 செவ்வாய்க்கிழமை அன்று புத்தளத்தில் உள்ள அவரது இல்லத்தில் பார்வைக்கு வைக்கப்பட்டு பின்னர் கச்சாய் வீதி கொடிகாமம் எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு, 29-07-2020 புதன்கிழமை அன்று இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் பாலாவிதால் இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.