9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
2
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இறந்தவரின் நினைவாக இங்கே பகிரலாம்.
யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸ் வில்லிய லூபலை வதிவிடமாகவும் கொண்டிருந்த வரதராஜா நேசரத்தினம் அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா ஆண்டுகள் பல கடந்திடினும்
ஆறவில்லை எம் மனது
அரவணைத்த கை நழுவியதோ
அன்னமிட்ட கை எம்மை மறந்ததோ
ஓயாமல் அழைக்கும் உங்கள்
குரல் ஒலி எங்கே?
கட்டளை இடும்
கணீர் ஒலி தான் எங்கே?
கேட்காமல் தவிக்கின்றோம்..
அன்பு பொங்க அரவணைத்து
கண்கலங்கி
வழி அனுப்பும்
விழி தான் எங்கே??
தேடுகின்றோம் இந்த பாரினலே
காணவில்லையே எம் கண்களிலே
அம்மா
எத்தனை பிறப்பு எடுத்தாலும்
அது
உங்கள் மடியாக இருக்க
வரம் வேண்டி நிற்கின்றோம்!!
ஓம் சாந்தி! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
என்றும் உங்கள் நினைவுடன் வாழும்
பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், மருமக்கள்...
தகவல்:
குடும்பத்தினர்