Clicky

மண்ணில் 19 AUG 1948
விண்ணில் 10 JUL 2024
அமரர் வன்னியசிங்கம் தவமணி
வயது 75
அமரர் வன்னியசிங்கம் தவமணி 1948 - 2024 பண்டத்தரிப்பு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Vanniyasingam Thavamani
1948 - 2024

பண்டத்தரிப்பினில் பிறந்த பாவையிவர். வண்ணத் தமிழழகன் ஐயா வன்னியசிங்கம் கண்ட மனமுற்ற மனையாள் தவமணி அம்மை.... பார்க்கையில் பதுமை.. பேச்சினில் புதுமை.. கருணையின் கண்ணியம்.. காற்றென வீரமகள். எண்மராய் பிள்ளைகள்.. முத்தேவியராய் மூன்று பெண்களும்.. பஞ்சபாண்டவராய் ஐந்தாய் அன்பு நிறை ஆண்களால் பெற்ற மகராசி... மறைவு கண்டார்.. உறவுகளின் உயிராள்.. உயிர் துறக்கலாமோ.. மறைந்தவர் மண்ணது மறவா மாண்பினர். இறைஞ்சியும் பிறவார் இவர் போல் இனியரே.. மன கறையேதுமற்றவர்.. விதியது சதி செய்திட இறைபதம் அடைந்தார் இறையதை வேண்டுவோம் இனிதென இவர் ஆத்மா சாந்தி அடைகவென... ஓம் சாந்தி சாந்தி.. .

Write Tribute